Tuesday, May 21st

Last update10:30:32 AM

காலத்தால் அழியாத ஹாலிவூட் இளவரசி

1955 இல் உலக திரையரங்குகளில் To Catch a Thief என்கின்ற பிரபலமான திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரித்தானியவைச் சேர்ந்த Alfred Hitchcock இன் படம் ஓடிக்கொண்டிருந்தது.

தெற்கு பிரான்ஸின் கரைகளில் எடுக்கப்பட்ட இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. மேற்கு அமெரிக்காவில் மாத்திரமே 4.5 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது.

 இப்படத்தில் தெற்கு பிரான்ஸின் மலைகளில் இருக்கக்கூடிய பாதையில் கதாநாயகியான Grace Kelly  உம் கதாநாயகனும் பயணித்த காட்சி முக்கியம் வாய்ந்தது.

படத்திற்கு எவ்வாறு முக்கியமானதோ Grace Kelly இன் வாழ்க்கையில் இக்காட்சி எடுக்கப்பட்ட இடம் முக்கியமான திருப்பத்தையும் முடிவையும் கொடுத்த பாதையாகும்.


அமெரிக்காவின் Filadephia  எனும் மாநிலத்தில் November 12, 1929 யில் பிறந்த இவர் பிரபல தொழிலதிபரும் கோடிஸ்வரரும் ஆகிய John Brendan Kelly Senior  இன் மூன்றாவது மகள் ஆவார். குடும்பத்தின் விருப்பத்திற்கு அப்பால் 22 வயதில் சினிமா உலகில் காலடியெடுத்து வைத்தார்.

 


1954 இல் The Country Girl என்கிற திரைப்படத்திற்கு சிறந்த கதாநாயகிக்கான ஆஸ்கார் விருதுடன் வேறு 3  விருதுகள் என ஒரே படத்தில் 4 விருதுகள் பெற்றார் Grace Kelly.



 

நாகரீகத்திற்கும் முன்மாதிரியாக இருந்தார், ஸ்டைல் ஐகான் என்கின்ற பட்டத்தை வாங்கிய முதல் பெண்களில் இவரும் ஒருவர் . இவர் திரையில் அணிந்த ஆடைகள் ஒவ்வொன்றும் அழகானதுடன், நாகரீக உலகம் இவருடை ரசனைகளை பாராட்டிக் கொண்டே இருந்தது.

பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்கள் இவருக்காக ஆடைகளை தாயரித்தார்கள். Hermess என்கிற கைப்பை தயாரிக்கும் நிறுவனம் இவருக்காக Kelly-hermess  எனும் பெயரில் ஒரு கைப்பையை தயாரித்தது. அது இன்னும் விற்பனையிலும் உள்ளது.



1956 The Swan என்கிற படத்தில் இளவரசியாக நடித்தார், இது கதை அல்ல நிஜம் என்பது போல் இவரது நிஜ வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. தெற்கு பிரான்ஸில் படப்பிடிப்பின் போது மோனாக்கோவின் இளவரசன் Rainier  III , Grace Kelly இன் வாழ்க்கையில் அறிமுகமாகி April 1956 இல் மணம் புரிந்து இளவரசியாகவும் ஆக்கினார்.

 

1956 High Society என்ற படம் தான் இவரது கடைசிப் படம் ஆகும்.

திரையின் ஊடக மக்கள் மனதை அழகினாலும் திறமையாலும் கவர்ந்து வந்த Grace இளவரசியின் கடமைகளை கெட்டிதனமாகவும் நன்றாகவும் புரிந்தார்,சமூக சேவையில் ஈடுபட்டு மக்களின் மனதில் ஆளமாக பதிந்தார்.  திருமணத்தின் நலத்தின் அடையாளமாக மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.
1957 இல் இளவரசி Carolina Luisa Margherita பிறந்தார். 1958 தற்போது ஆட்சிபுரியும் இளவரசன் Alberto II பிறந்தார். மற்றும் 1965 இளவரசி Stefania Maria Elisabetta வைப் பெற்றார்.


September 23  1982யில் 52 வயதில் எந்த பாதை இவர் படத்தினால் பிரபலமானதோ அதே தெற்கு பிரான்ஸின் கரையின் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த போதுதான் காலமானார்.
இன்னும் இவருடைய அழகும் திறமையும் அழியாதவை. இறந்து 30 வருடங்கள் ஆனாலும்,  நாகரீக உலகின் முன்மாதிரியாக என்றும் அழியாதவர் Grace kelly .
அவருடைய ஞாபகார்த்தமாக Mount Blanc - Princesse Grace de Monaco என்கிற சேகரிப்பினை செய்திருக்கின்றது.

Australia Bendigo Art Gallery யில் இவரது முக்கியமான ஆடைகள் கண்காட்சியில் வைக்கபட்டு இருந்தமை குறிப்பிடதக்கது.

- 4தமிழ்மீடியாவிற்காக Lavvya

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus