எம்மோடு நாகரீகம் கடந்து சென்ற ஐந்தாண்டுகளில்!
- Tuesday, 14 August 2012 00:00

2008 மொழிகளுக்கான ஆண்டு என கூறப்பட்டுள்ளது. நாகரீகத்தின் வரலாற்றின் முக்கிய வருடமாக திகழ்ந்தது.
இணைய உலகில் "Fashion Bloggers" இன் அறிமுகம்.
அமெரிக்காவின் பிரதமராக அந்த வருடம் தேர்ந்தெடுத்த ஒபாமாவின் துணைவியார் மிஷ்ஷெல் நாகரீகத்திற்கு முன்னுதாரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 வானியல் ஆண்டு இயற்கை இலைகளின் ஆண்டென கூறப்படுகின்றது.
நாகரீக உலகில் பல்வேறு மாற்றக்களையும் செய்து ஒரு தனி பெண்ணாக இச்சாதனைகளையும் படைத்து இரண்டு உலக யுத்தங்களையும் கடந்த Chanel என்கிற பிரபல ஆடைவடிவமைப்பாளரின் வாழ்கை குறித்து வெளிவந்த Coco Before Chanel படம் மிகவும் வெற்றி பெற்றது.
Slumdog Millionare எனும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் சிறுவர்களை இணைத்து சென்னையில் நடைப்பெற்ற ஆடை அணிவகுப்பு வாரம்.

2010 வளமார் இளைஞர் ஆண்டு
அவதார் என்ற படத்தோடு 3D சினிமாவின் பிறப்பும், நாகரீக உலகின் ஒரு அவதாரமாக திகழ்ந்த Alexander McQueen யின் மறைவும்.

DOLCE & GABBANA SPIGA 2 எனும் நாகரீக multibrand யின் உருவாக்கமும் DOLCE & GABBANA எனும் பிரபல வடிவமைப்பாளர்களோடு வேறு புதிய வடிவமைப்பாளர்களின் இணைப்பின் ஊடாக வெளிவரும் ஒரு புதிய பிராண்ட்.

2011 காடுகள் மற்றும் வேதியியல் ஆண்டு
Adele எனும் பாடகரின் வெற்றியும் அவரது அழகான குரலும் உலகை பிரம்மிக்க வைத்துள்ளது.

15 வயது மாத்திரமேயான Tavi Gevinson எனும் வலைப்பதிவாளர் Rookie Magazine எனும் இணையதளத்தின் தலைமை ஆசிரியராய் நாகரீக உலகை தன் காலில் கொண்டு வந்துள்ளார்.

2012
LANA DEL REY இசைப்பயண வெற்றியும் மற்றும் அழகும் இவரை ஒரு ஃபேஷன் டிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Mary-Kate and Ashley Olsen எனும் பிரபல நடிகை சகோதரிகளின் The ROW எனும் பிராண்ட் இம்முறை அமெரிக்கா ஆடை வடிவமைப்பாளர் குழுவினரால் சிறந்த மகளிர்க்கான ஆடைகளாக தேர்ந்து எடுக்கப்பட்டது.

- 4தமிழ்மீடியாவுக்காக: லாவ்யா
4தமிழ்மீடியாவின் ஐந்தாவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு பதிவுகள்
