Saturday, May 25th

Last update09:51:39 PM

பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் - 5 ஆயிரம் பேருக்கு விசா

பாகிஸ்தான் - இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறப்போகும் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்க 5000 பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசாக்கள் தருவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இப்போட்டிகளால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துள்ளதாக தெரியவருகின்றது.

20-20 ஆட்டம் 25ம் தேதி பெங்களூரிலும், இரண்டாவது ஆட்டம் 27ம் தேதி அகமதாபாத்திலும் நடக்கிறது. இதையடுத்து முதல் ஒருநாள் போட்டி 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 2வது ஆட்டம் கொல்கத்தாவில் ஜனவரி 3ம் தேதியும், கடைசி ஆட்டம் ஜனவரி 6ம் தேதி டெல்லியிலும் இடம்பெறுமென தெரியவருகின்றது.

இந்நிலையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே பகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாட வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவது தேசிய அவமானம்‘ என தனது பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டிருப்பது குறிப்பிடதக்கது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus