Monday, May 20th

Last update10:18:26 AM

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாய்னா நேவால் போராடித் தோல்வி


பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்துள்ளார்.

அரையிறுதி போட்டியில் ஜேர்மனி வீராங்கணை ஜூலியன் செங்கை வீழ்த்திய சாய்னா நேவால், நேற்று நடந்த இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை மிண்ட்சு மிதானியிடம் மோதினார்.

இந்த போட்டியில் முதல் செட்டில் சாய்னா மிகத்திறமையாக விளையாடினார். எனினும் 19,21 எனும் புள்ளிக்கணக்கில் அவர் மினட்சுவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து இரண்டாவது சுற்றில் மினட்சு மேலும் ஆக்ரோஷமாக விளையாடியாதில் 11,21 எனும் செட் கணக்கில் சாய்னா நேவால் தோற்றார்.

'நான் இன்று மிகவும் களப்படைந்துவிட்டேன். மினட்சுக்கு பாராட்டுக்கள். இது அவரது முழுத்திறமைக்கு கிடைத்த பரிசு' என சாய்னா கருத்து கூறினார். இப்போட்டியில் தோற்றாலும் உலகின் மூன்றாவது மிகச்சிறந்த பேட்மிண்டன் வீராங்கணை எனும் பெருமை சாய்னாவுக்கு தொடர்கிறது.  அவர் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சீரியஸில்  சாம்பியன் பட்டம் வென்று ஒரு வாரத்தில் பிரெஞ்சு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus