Friday, May 24th

Last update08:13:54 AM

டெல்லி - லயன்ஸ் மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது!

டெல்லி டேர்டெவில்ஸ் - டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த ஆட்டம் மழையினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இம்முறை சாம்பியன்ஸ் லீக் தொடர்பில் பலமுறை மழை குறுக்கிட்டதன் விளைவாக, அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பல அணிகள் தவறவிட்டிருந்தன.  ஆனால் அதிஷ்டவசமாக டைடன்ஸ் அணி, இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி - ஆக்லாந்தை 16 ரன்களால் தோற்கடித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 140 ஓட்டகளை எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய ஆக்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இப்போட்டியில் ஆக்லாந்து அணி தோல்வி அடைந்ததும், டைட்டன்ஸ் அரையிறுதிக்கு செல்ல காரணமாகிவிட்டது. இதையடுத்து முதலாவது அரையிறுதி போட்டி நாளை வியாழக்கிழமை, டெல்லி டேர்டெவில்ஸ் - லயன்ஸ் அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டம், நாளை மறுதினம், சிட்னி சிக்சர்ஸ் - டைட்டன்ஸ் அணிகலுக்கு இடையிலும் நடைபெறுகிறது.

இறுதி ஆட்டம், அக்.28ம் திகதி நடைபெறுகிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus