Thursday, May 23rd

Last update01:29:16 PM

லண்டன் ஒலிம்பிக் : இந்தியாவுக்கு இன்று முக்கிய போட்டி

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்றைய தினம் மிக முக்கியமானதொரு போட்டியாகும்.

மகளீருக்கான பாக்ஸிங்கில் பிளைட்வெயிட் 58 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கணை மேரிகோம், இங்கிலாந்து வீராங்கணை நிகோலா ஆடம்சுடன் மோதுகிறார். இதில் வென்றுவிட்டால் வெண்கல பதக்கத்தை உறுதி செய்துவிடுவார்.

இன்றைய ஆட்டத்தில் மேரிகோம் வெற்றி பெறவேண்டுமென மணிப்பூர் மக்கள் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இப்போட்டி நடைபெறும் போது மணிப்பூரில் மின்வெட்டு ஏற்படக்கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இன்று ஆடவருக்கான 49 கிலோ காலிறுதி போட்டியில் இந்தியாவின் தேவேந்திர சிங் லைஷ்ராம் விளையாடவுள்ளார். பெண்களுக்கான ஓட்டப்பந்த போட்டியில் இந்தியாவின் திந்து லூகா 800 மீ தகுதிச்சுற்றில் ஓடவுள்ளார்.

இதேவேளை நேற்று நடைபெற்ற ஆடவருக்கான மும்முறை தாண்டும் போட்டியில் (Triple Jump) இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத்தவறினார். தகுதிச்சுற்றின் மூன்று வாய்ப்புக்களிலும் அவர் தவறு செய்ததால், சிவப்புக்கொடி காட்டப்பட்டு பரிதாபமாக வெளியேறியுள்ளார்.

முன்னதாக மகளீருக்கான மும்முறை தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கணை மயூகா ஜானியும் தகுதிச்சுற்றில் 22வது இடம்பிடித்து வெளியேறியிருந்தார்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus