Wednesday, May 22nd

Last update10:22:12 PM

முன்னணி டென்னிஸ் வீரர் ரபீல் நடால் ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்

சர்வதேச டென்னிஸ் நட்சத்திரம் என்று ரசிகர்களால் புகழப்பட்ட ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபீல் நடால் ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் 27ம் திகதி லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் நடாலின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட தசைப் பிடிப்புக்கள் இன்னும் பூரண குணமாகாத நிலையில், போதிய உடற்தகுதியின்மையால் தன்னால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்துள்ளார். அவருக்கு இடது காலில் மூட்டுவலி பிரச்சின இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த விம்பிள்டன் போட்டிகளில் அவர் 100 வது இடத்திலிருந்த லூகாஸ் ரோசொலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியிருந்தார்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus