Sunday, May 19th

Last update09:25:28 PM

புனே,பெங்களூர் ஐபிஎல் அணி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு

புனே வாரியர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனே வாரியர்ஸின் உரிமையாளர்களான Sahara Adventure Sports Limited இன் மும்பை அலுவலகத்திலும், கர்நாடகா கிரிக்கெட் வாரியம் மற்றும் பெங்களூர் அணி தரப்பினருக்கு இடையிலான அணி வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் அவற்றின் அலுவலகங்களிலும் நேற்று குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கணக்கெடுப்பு பகுப்பாய்வு மட்டுமே, ரெய்டு நடவடிக்கை அல்ல என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட வீடியோவில் ஐபிஎல் வீரர்கள் ஸ்பாட்ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் வெளிவந்திருந்ததுடன், ஒப்பந்த தொகைக்கு மேலாக கறுப்பு பணம் பெறுவது தொடர்பிலும் இம்முறை ஐபிஎல் போட்டிகள் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தன.


பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus