Thursday, May 23rd

Last update01:12:35 AM

Play off க்கு செல்லுமா ராஜஸ்தான் : டெக்கானிடம் அதிர்ச்சி தோல்வி

ராஜஸ்தான் - டெக்கான் அணிகளுக்கு இடையில் இன்று ஹைதராபாத்தில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெக்கான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணியின் Play off சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. 

 இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்தது. டிராவிட் அதிக பட்சமாக 39 ஓட்டங்களை எடுட்தார். பந்துவீச்சில் ஸ்டைய்ன், பிரதாப் சிங், மிஷாரா தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு களமிறங்கிய டெக்கான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது. ரெட்டி 42 ஓட்டங்களை எடுத்து டெக்கானின் வெற்றிக்கு உதவினார். ராஜஸ்தான் அணிக்கு மும்பை இந்தியன்ஸுடன் ஒரு போட்டி எஞ்சியிருக்கிறது. நாளை பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus